ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் நடைபெற்று வந்தது கொள்ளை சம்பவங்களின் தலைவன் கணேசன் மற்றும் அவரோடு 3 நபரை ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 78 சவரன் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் விரைவில் காவல் துறையினர் மீட்டதை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். கணேசன் என்பவருக்கு தமிழ்நாட்டிலே மொத்தம் 74வழக்குகள் உள்ளன. 15 வாரண்ட் நிலுவையில் உள்ளன. ஈரோட்டில் 7 வழக்குகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தன. நபர்களை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்தது ஈரோடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து காவலர்களுக்கும் ஈரோடு மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜெ.கோபாலகிருஷ்ணன்