வேலூர் : தமிழக காவல்துறையில் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த (14.03.2022), -ம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு தேர்வான 149 பயிற்சி காவலர்களுக்கு 7 மாத பயிற்சி முடித்து பயிற்சி நிறைவு விழா வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவல்துறை கவாத்து மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் திரு.S ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையேற்று காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி மு. சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்/தற்காலிக பயிற்சி பள்ளி முதல்வர் திரு.S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் துணை முதல்வர் திரு. மனோகரன் IUCAW அவர்களின் தலைமையிலான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பயிற்சி காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் (14.03.2022),-ம் தேதி முதல் துவங்கப்பட்டது.
பயிற்சியின் போது காவலர்களுக்கு உடல் திறமைக்காக கவாத்து பயிற்சியும் மக்கள் பிரச்சனைகளை சரியான முறையில் தீர்க்க சட்ட வகுப்புகள், குண்டு சுடும் பயிற்சி மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுனர்களால் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டது.
இது மட்டும் இல்லாமல் காவலர்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காக நீச்சல் பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்று அளிக்கப்பட்டது. பயிற்சி காவலர்களுக்கு சமூக நோக்கத்தோடு மக்களுக்கு பணியாற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிறைவு பெற்றது. காவலர் பயிற்சி நிறைவு விழாவில் சட்டம்(Law), கவாத்து (Parade) மற்றும் துப்பாக்கி சுடுதல் (Fire) போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று பயிற்சி காவலர்களை
தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்