கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கோவை மாநகர துணைஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், சரவணம்பட்டி சோதனைசாவடியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா தடுப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்களுடன், தனிப்படை காவல்துறையினர் திரு.கந்தசாமி, உள்ளிட்ட குழுவினர் தீவிர சோதனை செய்தபோது, Ashok layland மினி load வாகனத்தில் சுமார் 700 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த, ரூபாய் 72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்து மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை பாராட்டி கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்கள் பாராட்டி சான்று வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்