இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 72 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். விழா நிகழ்வுகள் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பாராட்டுக்குரியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது என அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
















