கடலூர் : பாண்டிச்சேரியிலிருந்து சீர்காழிக்கு லாரியில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், எஸ்ஐ அழகிரி,மற்றும் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பி. முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே வந்த வாகனத்தை நிறுத்திய போது அதில் இருந்த டிரைவர் ராஜவேல் தப்பி ஓடினார் அவரை போலிசார் மடக்கி பிடித்தனர் பின்னர் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் 20 கேன்களில் சாராயம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து சாராயம் கடத்த பயன்படுத்திய அந்த மினி லாரியையும் 20 கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தில் மது நடத்துவதற்கு என் பிரத்யேகமான அறை அமைக்கப்பட்டு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கபட்டது அந்த ரகசிய அறையில் 20க்கும் மேற்பட்ட சாராய கேன்களை சிதம்பரம் மதுவிலக்கு காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்