பெரம்பலூர்: கலெக்டர் திருமதி.ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பழனிசாமி, இன்ஸ்பெக்டர் திரு.செல்வகுமார் மற்றும் போலீசார் இணைந்து பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்லுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், தகுதிச்சான்று இல்லாமை, டிரைவர் லைசென்ஸ், காப்பு சான்று, புகைச்சான்று போன்ற வகையில் இயக்கப்பட்ட 7 வாகனங்களை பறிமுதல் செய்து அந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 76 ஆயிரம் அபாராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.