கோவை : கோவை துடியலூர் பக்கமுள்ள பன்னி மடையில் 2019-ம் ஆண்டு 7 வயதுசிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொ டூரமாக கொலை செய்யப்பட்டாள் . இதுதொடர்பாக துடியலூர் அனைத்து மகளீர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர் .இவர் மீது கோவை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் .இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ்குமாரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி இன்று தீர்ப்பு வழங்கினார்.
