கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி Dr தமிழ்ச்செல்வன் கூட்டாக பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர் .
இந்த நிலையில் இன்று 09/01/20 தேதி வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பான்மசாலா குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கப்பட்டு உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை பெரியக்கடை வீதி ராஜா ஸ்ட்ரீட் உள்ள சங்கர் fancy ஸ்டோர் godown ற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
அங்கு சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் க ண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த நகாராம் (30) மற்றும் பேராராம் (28) ஆகிய சகோதரர்களை கைது செய்தும் தடை செய்தபோதை பொருட்கள் வைத்திருந்த கிடங்கையும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகர் முழுவதும் குட்கா பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் மீறி தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிக்கப்பட்டால் மாநகர காவல் துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர் காவல் துணை ஆணையர் எச்சரிக்கை விடுதுள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்