கோவை: கோவை ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன் 48 இவர் அங்கு தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவரதுபட்டறையில் தங்கராஜ் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.கடந்த மாதம் 12ஆம் தேதி 250. கிராம் தங்க கட்டியை தங்கராஜிடம்நகை செய்யுமாறு கொடுத்தார்.
அதில்80 கிராம் தங்க நகைகளை மட்டும்செய்து கொடுத்துவிட்டு மீதி 171 கிராம் தங்கத்தை நகை செய்யாமல் தங்கராஜ் மோசடி செய்துவிட்டார்.இதுகுறித்து ஆர் எஸ் புரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோகனன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை தொழிலாளி தங்கராஜை தேடிவருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்