ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை ராமு மகன் தேவா, 26. இவர் கடந்த மார்ச் 30 இரவு முன்விரோதம் காரணமாக 6 பேர் கும்பல் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்தது. உடல், தலையை வெவ்வேறு இடங்களில் வீசிச்சென்றனர். இது தொடர்பாக கட்டக்காரன்வலசை ராமு மகன் கணேசமூர்த்தி 23, கீழநாகாச்சி முருகேசன் மகன் ஆமுகார்த்திக் 24, மரவெட்டிவலசை களஞ்சியம் மகன் தினேஷ் 23 சங்கந்தியான் வலசை முனியசாமி மகன் திருஞானம் 23, மரவெட்டிவலசை ஏழுமலை மகன் விஜய் 22, சண்முகம் மகன் மணிமாறன் 23 ஆகியோரை உச்சிப்புளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கார்த்திக் பரிந்துரையில், கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர் உத்தரவில் 6 பேரையும் உச்சிப்புளி காவல் ஆய்வாளர் கணேசன் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.