தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சித்திரை பாபு என்பவரது மனைவி சாரதா 40. என்பவர் கடந்த 24.01.2023 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர் திரு. செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் பாரத் 19. என்பதும், அவர் மேற்படி சாரதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளியான பாரத்தை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,40,000/- மதிப்புள்ள 7 பவுன் தங்க செயினையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி பாரத் என்பவர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்பு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்பு வழக்கிலும் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.