திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் கிராமம், வீரானந்தல், நடுத்தெருவைச் சேர்ந்த முருகன் 58. த/பெ ஆறுமுகம் என்பவர் தன் மகன் வெங்கடேசனுடன் செங்கம் சென்று அம்மாபாளையம் to புதுப்பாளையம் மெயின் ரோட்டில் திரும்பி வரும் போது.
தங்களை வழிமறித்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், GN.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 1) மதி, 25, 2) வசந்த், 24,, 3) சுரேஷ், 32,, 4) வல்லரசு, 24, மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த 5) வினோத், 25, , 6) ஏழுமலை, 24, ஆகிய ஆறு நபர்களும் முன்விரோதம் காரமாக தனது மகனான வெங்கடேசனை வெட்டி கொலை செய்ததாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,
செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.K.சரவணன் அவர்கள் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து மேற்கண்ட ஆறு எதிரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தன்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி எதிர்மேடு கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த விஜி 23 என்பவர் தானிப்பாடி பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக தானிப்பாடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தன்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.R.தனலட்சுமி அவர்கள் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட 07 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் கள்ளச்சாரயம் காய்ச்சிய மற்றும் விற்பணையில் ஈடுபட்ட 32 நபர்கள், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட 20 நபர்கள், கொலைமுயற்சியில் ஈடுபட்ட 14 நபர்கள், திருட்டு மற்றும்
வழிப்பறியில் ஈடுபட்ட 29 நபர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 01 நபர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 02 நபர்கள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 07 நபர்கள் உட்பட 105 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.