தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு தேனி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் திரு.கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கம்பமெட்டு காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனாதையாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து பார்த்ததில் அதில் 50 கிலோ சிப்பமாக 140 சிப்பங்கள் மொத்தம் சுமார் 7 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
ரேசன் அரிசியையும், மினி லாரியையும் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.