சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் வட்ட காவல் நிலையம் சார்பில் 7 காவல் நிலையங்கள் சார்பில் நேற்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு.ஆத்மநாதன் அவர்கள் தலைமை வகித்தார். திருப்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய கலைவாணி அவர்கள் ,எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய அந்தோனிசெல்லத்துரை அவர்கள் ,திருப்பத்தூர் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சித்திரைப் செல்வி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முகாமில், திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் உட்கோட்ட சார்பு ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய செல்வபிரபு அவர்கள் ,பாலகிருஷ்ணன் அவர்கள் ,சிவாஜி பாண்டியன் அவர்கள் ,விஜய் அவர்கள் ,பெரியசாமி அவர்கள் , கலையரசன் அவர்கள் , சாமுண்டீஸ்வரி அவர்கள் ,சேதுபாமா அவர்கள் ,மற்றும் ஏனைய காவல் ஆளுநர்கள் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் அதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி