தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது 7 வயது மகள் இன்று காலை தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி மாயமானாள். சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியை உறவினர்கள் தேடினர்.
இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஒதுக்குபுறமாக கிடந்த தண்ணீர் டிரம்பில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்ப இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்பொழுது காவல்துறையினர் விசாரணையில் காணாமல் போன சிறுமியின் உடல் தான் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மாஸ்ட்டம் செய்வதற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்துள்ளது
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் நந்தீஸ்வரன்,மூத்தீஸ்வரன் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                                











 
			 
		    


