குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஸ்டீபன் அவர்கள் மற்றும் போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது Ashok Leyland Dost வண்டி வேகமாக வந்துள்ளது. அதனை நிறுத்தி அதிலிருந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் 23. என்பது தெரியவந்தது. பின்பு அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தார். மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது குட்கா பதுக்கி வைத்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.அதன்பின் அவரிடமிருந்து 680 கிலோ குட்காவை பறிமுதல் செய்தார்.
பின்பு அவர்மீது ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஸ்டீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.