மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர்.திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இகா.ப., அவர்கள் உத்தரவுப்படி நேற்று B1 விளக்குத்தூண் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அவருக்கு கிடைத்த தகவலை பெற்று மதுரை டவுன் கீழ மார்ட் வீதி, இரண்டாவது சந்து, மீரா ஸ்டார் அருகே புகையிலை மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தார்.மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் வெள்ளைச்சாமி, த/பெ. பால்ராஜ், லெட்சுமிபுரம் 6வது தெரு, மதுரை என்பது தெரியவந்தது. எனவே வெள்ளைச்சாமியை கைது செய்து அவரிடமிருந்து 68 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதுரை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்த காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.