திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது SJLT டெக்ஸ்டைல் மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்தின் படி பெங்களூரில் இருந்து வந்த ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 678 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சுப்பு குண்டா (22) மற்றும் சச்சின் (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து திண்டுக்கல் வழியாக ராமேஸ்வரம் கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கூம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கூம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 678 கிலோ குட்கா பொருள்களும் ஒரு ஈச்சர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா