மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகிறது. இவ்வடைப்புக்களை சரிசெய்வதற்கு மாநகராட்சியில் நான்கு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பாதாளச்சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு கூடுதலாக இரண்டு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள்; (சுமார் 6000 லிட்டர்) 15வா ஊகுஊ திட்டத்தின் கீழ் ரூ.67.70 இலட்சம் மதிப்பீட்டில்; வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை, மேயர், ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் விரைந்து சரிசெய்யப்படும். இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் தியாகராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திரு.ரவி