சென்னை: தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக, காத்திப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலனை நியமித்து தமிழக உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
உளவுத் துறை ஐஜி மட்டுமின்றி மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
- திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம்.
- மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.-யாக மகேஸ்வரன் நியமனம்.
- சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம்.
- சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்.
- காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி-யாக கண்ணன் நியமனம்.
- ஏஎஸ்பிகளாக இருந்த சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவாச், ஹர்ஷ் சிங், சாய் பிரணீத் ஆகியோர் எஸ்.பி.-க்களாக பதவி உயர்வு.