மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் (65) வயது மூதாட்டி, இவர் பஸ்சில் வந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தனது ஊருக்கு கச்சிராயிருப்பு பிரிவில் இறங்கி நடந்து சொல்ல வேண்டும் . தினமும் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வரும் தனது பாட்டி இரவு 9 மணி வரை வீட்டிற்கு வராததால், உறவினர்களை அழைத்து அருகில் உள்ள கண்மாய் கரையில் பாட்டியை அவரின் பேரன் தேடிச் சென்றார். அப்போது, கண்மாய் கரை அருகில் பாட்டியின் பை டிபன் பாக்ஸ் உடைகள் கிடந்தது. உடனே அருகில் இருந்த உறவினர்களை அழைத்துக் கொண்டு கண்மாய் நீரில் பாட்டி தவறி விழுந்திருக்கலாம் என்று தேடினர்.

பாட்டி கிடைக்காததால், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, காவல்துறையினர் வந்து தேடிய போது வாய் கட்டப்பட்ட நிலையில் கண்மாய்க்குள் காயத்துடன் இருப்பது கண்டு உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காடுபட்டிகாவல் துறையில், விசாரித்ததில்,
அருகில் உள்ள கீழ மட்டையான் கிராமத்தை சேர்ந்த சிவபாண்டி என்ற குயில் பாட்டியை பலாத்காரம் செய்வதற்காக கண்மாய்கரைக்கு தூக்கிச் சென்றது தெரிய வந்தது.
அவரை காவல்துறையினர் , கைது செய்து விசாரிக்கையில் ,அவர் மீது ஏற்கனவே இரண்டு பாலியல் வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. (65), வயது பாட்டியை (25) வயது இளைஞர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி