தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 65 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழிப்பு – இதுவரை மொத்தம் 6584 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது – இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. (02.10.2023) கோவில்பட்டி உட்கோட்டத்தில் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் 62, நீர்தேக்க தொட்டி 3 என 65 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியதர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 6584 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.