விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங் சாய் IPS. அவர்களின், அறிவுறுத்துதலின் பேரில் காவல் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொள்ள காவலர்களுக்கு 65 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் 49 இருசக்கர வாகனங்கள் காவலர்களுக்கும், 16 இருசக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் பகல் ரோந்து, இரவு ரோந்து மற்றும் கிரைம் ரோந்து பணி (Alfa Patrols) மேற்கொள்ள வேண்டியும், 16 இரு சக்கர வாகனங்கள் (Pink Patrols) பள்ளி மற்றும் கல்லூரி நேரங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டியும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்.