திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை கொரோனா தொற்று பரவலை தடுக்க
தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது
மாவட்டம் முழுவதும் 59-இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக *சோதனைச்சாவடிகள்* அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்றுவருகிறது.
40 -இருசக்கர வாகன ரோந்துகள்,04-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்,
இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன.2-இடங்களில் பிக்கெட்டிங் எனப்படும் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் காவல் அதிகாரிகள்,காவலர்கள் மற்றும் ஊர்காவல்படை காவலர்கள் என
1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதுகாப்பு நடவடிக்கைகள்,மற்றும்
பாதுகாப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* திருமதி.அ.கயல்விழி IPS
அவர்களின் நேரடிப்பார்வையில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும்,
பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில்
கடந்த மூன்று தினங்களாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த
640 பேர் கைது செய்யப்பட்டு 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும்
தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை நடவடிக்கையில் ஒரேநாளில்
154 வாகனங்கள்* பறிமுதல் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதுவரை
முகக்கவசம் அணியாமல் வெளியில்* *சுற்றித்திரிந்த நபர்கள் மீது 8765-வழக்குகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 545 வழக்குகளும்* பதிவு செய்யப்பட்டு ரூ.20,25,500 அபராதம் வசூலிக்கப்பட்டு*அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்* என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.