தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி சென்னை பெருநகர கீழ்பாக்கம் துணை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு.
அவர் பதவி உயர்வு பெற்றதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் திரு. கோபி அவர்கள் மென்மேலும் பல பதவி உயர்வுகள் பெற வாழ்த்தினார். மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரும் வாழ்த்து தெரிவித்தனர்.