சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் கடந்த 1 வருடமாக தனது மனைவி சந்தியா மற்றும 3 ½ மாத பெண் குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்து வரும் விழுப்புரம் மாவட்டம், நந்தியம்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ். வ/29, குழந்தையுடன் படுத்து உறங்கி மீண்டும் 09.11.2020 அதிகாலை பார்த்தபோது பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து சந்தியா K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 09.11.2020 இரவு T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.லட்சுமணன், வாகன ஓட்டுநர்/தலைமைக்காவலர் திரு.செந்தில்குமார் ஆகிய இருவர் ஒரு சிறுவன் தந்த தகவலின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட், மாருதி ஷோரும் அருகே பிளாட்பாரத்தில் ஒரு குழந்தையை மீட்டனர. பின்பு விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை கோயம்பேடு பகுதியில் காணாமல் போன குழந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டு குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் குழந்தையை கடத்திய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் 3 தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவின் தொழில் நுட்ப உதவியுடன் அம்பத்தூர்எஸ்டேட், அண்ணாநகர் சாந்தி காலனி பகுதிகளில் CCTV பதிவினை ஆராய்ந்து அதை தொடர்ந்து தனிப்படையினர் திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, காஞ்சிபுரம், மற்றும் பூந்தமல்லி வரை சுமார் 600க்கும்மேற்பட்ட சி.சி.டிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு மேற்படி குழந்தை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 1) பாபு, வ/36, பழைய திருமங்கலம் 2) கணேஷ், வ/24, காஞ்சிபுரம் மாவட்டம் 3.செங்குட்டுவன், வ/36, திருவண்ணாமலை மாவட்டம் 4) காயத்ரி, வ/33, திருமங்கலம், மற்றும் அவரது மகன் 17 வயதுடைய இஞ்சிறார் மற்றும் 16 வயது மற்றொரு இளஞ்சிறார் என மொத்தம் 6 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி செங்குட்டுவனக்கு தெரிந்த அபிநயா என்பர் தனக்கு திருமணமாகி 8 வருடமாக குழந்தை இல்லாததால் ஏதேனும் குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், அதற்கு ரூ.25 லட்சம் பணம் தருவதாக கூறியதால் பணத்திற்கு ஆசைப்பட்ட செங்குட்டுவன் தனக்கு அறிமுகமான நபர்களுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி அபிநாயவிடம் கூற. அபிநயா குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்டு மேலும் முறைப்படி தத்து எடுத்துக்கொள்வதாக கூறவும் கடத்தல் கும்பல் அதிர்ச்சியடைந்து செய்வது அறியாமல் குழந்தையை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பிளாட்பாரத்தில் போட்டு விட்டு தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்