வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (20.12.2022)-ம் தேதி வேப்பங்குப்பம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் அவர்களின் தலைமையிலான போலீசார் முத்துக்குமரன் மலை செக்போஸ்டில் சோதனை செய்தபோது குற்றவாளி சுரேஷ் என்பவர் இரு லாரி ட்யூபில் விற்பனைக்காக சுமார் 60 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்