திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் டி. கே .ஆர் என்ற தெருவில் வசித்து வருபவர் தேன் பிரபாகரன் வயது (31) சொந்தமாக மீஞ்சூரில் மொபைல் விற்கும் கடை நடத்தி வருகிறார். மனைவியின் பெயர் நந்தினி வயது (26). தேன் பிரபாகரன் மனைவி முதல் பிரசவத்திற்காக தனது தாய் வீடான எட்டயபுரத்திற்கு சென்று மூன்று வாராங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் தேன் பிரபாகரனின் தந்தை ஒரு விபத்தில் சிக்கி எந்தவித அசைவும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதன் காரணமாக அருகில் இருக்கும் தந்தையின் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.
தேன் பிரபாகரன். இன்று காலை தேன் பிரபாகரன் தாயார் அருகில் உள்ள அவரின் வீட்டில் உள்ள ட்ரட் மில்லரில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்ற பொழுது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தன்மகன் தேன் பிரபாகரனிடத்தில் இது குறித்து கூறியுள்ளார். உடனடியாக அவர் சென்று பார்த்த பொழுது பீரோவின் உள்ளே இருந்த 60 சவரன் நகையும் 40 ஆயிரம் ரூபாய் பணம் காணவில்லை என்று போலீசார் இடத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் தடையியல் நிபுணர்களை கொண்டு திருட்டு நடந்த வீட்டின் கதவுகள் மற்றும் பீரோவின் கதவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு