சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். சிவாகங்கை அக்டோபர் 30_சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இப்பதவிக்கு கிராம உதவியாளர் பதவிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 1.7.2020 அன்று குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது பொதுப்பிரிவினர் என்றால் 30 வயது என்றும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றால், அவர்களுக்கு 35 வயது வரை என்றும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்றால் அவர்களுக்கு வயது 35 என்றும், ஆதிதிராவிடர்களுக்கு வயது 35 என்றும் விண்ணப்பிக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை தாலுகாவில் அழகமாநகரி ,கீழேகண்டணி சிலந்தகுடி ,காடனேரி ,இலுப்பக்குடி ,பொன்னார் குளம் ,இடையமேலூர், பாகனேரி ,ஓ புதூர், வேம்பத்தூர் ,ஆகிய ஊர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பப்பட உள்ளன.
இதேபோன்று காளையார்கோவில் தாலுகாவில் அல்லூர், பெரிய கண்ணனூர் ,ஒய்யவந்தான் ஒயே பந்தன் ஆகிய மூன்று ஊர்களுக்கு காளையார் கோவில் தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன .மானாமதுரை தாலுகாவில் வா குடி மாரநாடு, மேலப்பாவூர் ,விளத்தூர், மானாமதுரை நகர் ,சிறுகுடி ,செந்தட்டியேந்தல் ஆகிய ஏழு ஊர்களில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இளையாங்குடி தாலுகாவில் தாயமங்கலம் ,சாலைகிராமம், ஆக்கவயல்,மேலையூர், அரண்மனை கரை சமுத்திரம் ,வண்டல், சீவலாதி,இளமனூர் ,குறிச்சி ஆகிய பதினோரு ஊர்களில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம் புதூர் தேவகோட்டை தாலுகாவில் அனுமந்தகுடி ஆறாவயல் ,செலுவத்தி,திருவேகம்பத்து ஆகிய நான்கு ஊர்களில் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
காரைக்குடி தாலுகாவில் அரியக்குடி ,பாலையூர் வானியல், மேல மணக்குடி ,பெரிய கொட்டகுடி ஆகிய ஐந்து ஊர்களில் காரைக்குடி தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. திருப்பத்தூர் தாலுகாவில் பெரிச்சி கோவில், துவார் ,தென்மாபட்டு,வாணியங்காடு, கீழ பட்டமங்கலம், கள்ளிப்பட்டு, செவரக்கோட்டை, கருப்பூர் ,ரணசிங்க புரம் ,தெற்கு இளையாத்தங்குடி ,செண்பகம் பேட்டை ,ஆகிய பதினோரு ஊர்களில் திருப்பத்தூர் தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
சிங்கம்புணரி தாலுகாவில் கிருங்காக்கோட்டை, கரிசல்பட்டி, ஏரியூர்,முசுண்டபட்டி, ஏ .மேலையூர் ,காயாம்பட்டி மேலப்பட்டி, டி.காளாப்பூர் ஆகிய 8 ஊர்களில் சிங்கம்புணரி தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப மனு வருகிற 20. 11. 2020 பிற்பகல் 5 மணி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார் .மேலும் மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் அல்லது வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படம் ஒட்டிய படத்தோடு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி