திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மோசடி போன்ற குற்ற செயல்களில் உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது, இதில் களவு மற்றும் காணாமல் போன சுமார் 6.5 லட்சம் மதிப்பிலான 50 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை தஞ்சை சரண காவல்துறை தலைவர் திருமதி.அ. கயல்விழி, அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரேஷ்குமார், அவர்கள் மீட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்கள்.