திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலமரத்துபட்டியில் அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர் காளீஸ்வரன் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரி என கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை அள்ளி சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமை காவலர் திரு.சங்கரநாராயணன், தலைமை காவலர் திரு.செந்தில்குமார், தலைமை காவலர் திரு.சந்தியாகு, தலைமை காவலர் திரு.மருதுபாண்டியன், முதல் நிலை காவலர் திரு.அருளானந்தம், முதல் நிலை காவலர் திரு.பிரபாகரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் முதல் நிலை காவலர் திரு.ராஜசேகர், காவலர் திரு.மணிகண்டன் ஆகியோர் உதவியுடன் மர்ம கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த கும்பல் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து தனிப்படையினர் விரைந்து சென்று ஒரு பெண் உட்பட ஆறு நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 5 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் 100 பவுன் தங்க நகைகள் ரூபாய் 5 லட்சம் பணம் மொத்தம் ரூ 6.5 கோடி மதிப்புள்ள சொத்து,பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ் முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.