கோவை: டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு மேல் தான்திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த உத்தரவை மீறிகோவையில் உள்ள டாஸ்ர்மாக்கடை அருகே அதிகாலையில் இருந்து மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வெள்ளலூர், ஆர்.எஸ். புரம், வெங்கிட்டாபுரம், காந்திபுரம் ,பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகிலும், பெட்டிக் கடைகளிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளலூர் , சமத்துவபுரம் மாரிமுத்து (வயது 42) திருச்சி பெரியசாமி (வயது 41) சிவகங்கை மாவட்டம் சுதாகர் (வயது34) செல்வபுரம் ஆறுமுகம் (வயது19) கும்பகோணம் பாரதிராஜா (வயது 41) ராமநாதபுரம் மாவட்டம் வரதராஜன் (வயது 41) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
