விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள ஏ.குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் அதே ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்து வந்தார்.
அந்த இடத்தை காலி செய்யச் சொல்லி ஊர் தரப்பினர் அய்யனார் இடம் வாக்குவாதம் செய்த நிலையில் இது தொடர்பாக அய்யனார் 2016 ஆம் ஆண்டு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அய்யனாரை கடுமையாக தாக்கினர் இதில் அய்யனார் உயிரிழந்தார். அய்யனாரின் தம்பி சிவகாந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம், சௌந்தரராஜன், குமார், செல்வம், குமரவேல், அஜித் ஆகிய ஆறு பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி இளவழகன் உத்தரவு