விருதுநகர்: விருதுநகர் முத்துராமன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பத்மினி 62. இவர் கோவிலுக்கு நடந்துசென்று கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை அறுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.
நகையை பறி கொடுத்த அவர் கதறி அழுதார். இது குறித்து பத்மினி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.