சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
1) ராஜா (எ) பேபி ராஜா (வ/26), மண்ணிவாக்கம் (T-3 கொரட்டூர் காவல் நிலையம்),
2) தேஜா (வ/25), எழும்பூர் (T-3 கொரட்டூர் காவல் நிலையம்),
3) சரவணன் (எ) ராவணன் (வ/26), அயனம்பாக்கம். (T-5 திருவேற்காடு காவல் நிலையம்)
4) இம்ரான் (எ) இம்ரான்கான் (வ/21), செங்கல்பட்டு , (S-5 பல்லாவரம் காவல் நிலையம்)
5) விஜய் ஆனந்த் (எ) விஜய் ( வ/23), அஸ்தினாபுரம் , (S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்)
6) ரஞ்சித்குமார் (எ) சின்னா (வ/30), குரோம்பேட்டை, (S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்)
மேற்படி குற்ற குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில்,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் , இ.கா.ப , அவர்கள், மேற்படி குற்ற குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின்பேரில்,
மேற்படி 6 குற்ற குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.