திண்டுக்கல்: கஞ்சா விற்பனை சூடுபிடித்துள்ளது. போலீசார் கொரோனாபணியில் ஈடுபட்டு வருவதால் கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பாடகிரியிலிருந்து கஞ்சாக்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
இவர்கள் திண்டுக்கல்லை மையமாக வைத்து மதுரை, தேனி உட்பட பல தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பலரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இருந்தாலும் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை. போலீசார் அடிக்கடி கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதும் வழக்குப்பதிவு செய்வதும் வாடிக்கையான விஷயமாக உள்ளது. ஆனால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அதன் விற்பனையும் குறைந்தபாடில்லை. இந்நிலையில்
திண்டுக்கல், ஏ. வெள்ளோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கருப்பாயி(86), சாத்தாயி(71) ஆகிய 2 பேரை அம்பாத்துரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா