சென்னை: சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள். மாஞ்சா நூல் தயாரிப்பவர்களும், அதைக் கொண்டு பட்டம் பறக்க விடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக T3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 14.05.2021 அன்று மாலை, பாடி, வடக்கு மாட வீதி பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு ஆபத்து விளைவிக்க கூடிய வகையில், தடையை மீறி பட்டம் விட்ட 1.ஜீவா, வ/25, பாடி, 2.பாலாஜி, வ/24, பாடி 3.சதீஷ், வ/27, பாடி 4.பிரேம்குமார், வ/26, பாடி மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 5 நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 பட்டங்கள் மற்றும் 3 லோட்டாய் நூல்கண்டு கைப்பற்றப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், பிடிபட்ட 5 நபர்களின் பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைத்து நடவடிக்கை எடுத்தும் தக்க அறிவுரைகள் வழங்கியும், எச்சரித்தும் அனுப்பி வைக்கப்பட்டனர்.