திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராம்ஜி நகர் காவல்நிலைய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்