மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை இன்று மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் விளையாட்டு பந்தயங்கள் நடக்கும் அரங்கத்தில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் த.சி.கா மதுரை 6-ம் அணி தளவாய் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப.,, த.சி.கா வீராபுரம் 3-ம் அணி தளவாய் திரு.சம்பத்குமார் இ.கா.ப.,, த.சி.கா பழனி 16-ம் அணி தளவாய் திரு. அய்யாசாமி, த.சி.கா திருச்சி 1-ம் அணி தளவாய் திருமதி.உமையாள், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகள் 14.10.2019 முதல் 16.10.2019 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் நான்கு மண்டல காவல்துறையினர், ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகரை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை