திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்ற வழக்குகளில், ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்கள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. தில்லை நாகராஜன், அவர்களின் மேற்பார்வையில் முன்னீர்பள்ளம் காவல் நிலைய காவலர் திரு. முருகபெருமாள், என்பவர் சேரன்மகாதேவி வட்டாட்சியர், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் மூலமாக குற்ற வழக்குகளில் உள்ள 59 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று கொடுத்துள்ளார்.
இதனால் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. மேற்படி காவலரின் பணியினை பாராட்டும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள்., இரண்டாம் நிலை காவலர் திரு. முருகபெருமாள், என்பவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார். இந்த நன்னடத்தை பிணை பத்திரம் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 1 வருடத்திற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று 1 வருடத்திற்குள் குற்ற செயல்களில், ஈடுபட்டால் நீதிமன்ற நடுவர் அவர்கள் மூலமாக நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி குற்றம் புரிந்ததற்காக குற்றவாளி, சிறையில் அடைக்கப்படுவார்.