நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் இணையம் கணினி அறிவு பற்றிய பயிற்சி பெற்று பொதுமக்களுக்கு பணியாற்றிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாக்கூர்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில் 393 காவல் ஆளிநர்கள் 8 கல்லூரிகளில் 2 மாதங்களாக பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பயிற்சி முடித்த காவல் ஆளிநர்களுக்கு கல்லூரி முதல்வர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.