ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் திருந்தி வாழ 22.01.2020ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று 28.01.2020ம் தேதி சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களில் இருந்து 52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருந்தி மறு வாழ்வு வாழ உறுதி கொண்டதின் பேரில் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும், மேலும் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நன்றாக படித்து அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்ல உரிய துறைகளின் ஒத்துழைப்போடு உதவி செய்யப்படும் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக நூலகம்,விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர். திருமதி.கீதா, காவல் ஆய்வாளர்கள் திரு.ஆனந்தன், திரு.காண்டீபன், திருமதி.பிரபாவதி, திரு.பரந்தாமன் மற்றும் வட்டாட்சியர்கள் திரு.பாலாஜி திருமதி.முத்துச்செல்வி மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்