தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மைசூரில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 511 கிலோ இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் எட்டு லட்சம் ரூபாய் ஆகும். இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த மைசூர் பகுதியை சேர்ந்த விவேக்(30) மற்றும் ஸ்ரீதர்(24) ஆகிய 2 பேரையும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.விஜயா அவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.