சென்னை : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் ரகசிய அறை அமைத்து தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 510கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்த சச்சின் நாராயணன், சுந்தர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை திருச்சிக்கு கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் செங்குன்றம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டார். லாரியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் 1680 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என ஆணையர் தெரிவித்தார். தார் டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 510கிலோ கஞ்சா சுமார் 70லட்ச ரூபாய் மதிப்பிலானது எனவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் அப்போது தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்