கோவை : இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (12.10.2022) சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாதையன், உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத், மற்றும் காவல்துறையினர் சூலூர் செங்கோடகவுண்டன்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த TN 57 BK 6190 என்ற வாகனத்தை சோதனை செய்தபோது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணபத்ராம் (25), தினேஷ்(20),
ஹைத்மத்ராம்(32), கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (27) மற்றும் சரவணகுமார் (47) ஆகிய 5 நபர்களையும் கைது செய்தனர்.
அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 502 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். இது போன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.