மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (38) இவரிடம் அதே ஊரை சேர்ந்த சரத்குமார் (29), மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி (29), ஆகிய 2 பேரும் 500 ரூபாய் ஒன்றை கொடுத்து மதுபாட்டில் வாங்கி வர சொல்லி உள்ளனர். விக்னேஸ்வரன் அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டை பார்த்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. உடனே விக்னேஸ்வரன், அங்கிருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் பிடித்து சாப்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சரத்குமார் மற்றும் மருதுபாண்டி ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி