கோவை: சோதனைச் சாவடிகளிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது காவல் பணி கண்காணிப்பு போன்றவற்றில் போலீசார் ஈடு படுகின்றனர்.
ஓய்வின்றி தொடர்ந்து பணியில் இருப்பதால் போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தமிழக டி.ஜி.பி உத்தரவின்படி தினசரி 20 சதவீத போலீசாருக்கு விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாநகரில் ஆயுதப்படை மற்றும் போலீஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 2500 போலீசார் பணியாற்றுகிறார்கள். இதில் தினசரி 500 பேருக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதில், போலீசார் 4 நாள் பணி செய்யவும் ஒரு நாள் விடு முறை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் போலீசார் பணிச்சுமை இன்றி உற்சாகத்துடன் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்