கோவை: கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்ராக்ட் மாவட்ட அமைப்பு (3201) இணைந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் ரோந்து காவலர்களுக்கு முதலுதவிப் பயிற்சி மற்றும் முதலுதவி உபகரணங்கள் (First Aid Kit) வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் திரு. தீபக் எம்.தாமோர் இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்து இப் பயிற்சியை துவக்கி வைத்தார்.
கோவை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் வைக்கப்படும் முதலுதவி உபகரணங்களையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் போக்குவரத்து, திரு.S.R. செந்தில்குமார் அவர்கள் மற்றும் கோவை மாநகர கூடுதல் துணை ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, திரு.N. சிலம்பரசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இதில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் ரோந்து காவலர்களுக்கு மாரடைப்பு, இருதய பிடிப்பு, நீரில் மூழ்குதல், உணவுக்குழாய் அடைத்தல், பாம்புக்கடி, ரத்தக்கசிவு மற்றும் அடிபட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதல் உதவி சிகிச்சை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியானது ரோட்ராக்ட் மாவட்ட அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவ்வமைப்பின் DRR Rtr. கீர்த்திவிவேக்,DRRE Rtr. கிஷோர்பாபு, Rtr. முஸ்கான் மேக்தா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் துளசி பார்மசியினரால் கோவை மாநகரில் உள்ள 52 போக்குவரத்து சிக்னல் களிலும் முதல் உதவி உபகரணங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வகுப்பில் 100 காவல்துறையினர் பயிற்சி பெற்றனர். மேலும் 500 போக்குவரத்து மற்றும் ரோந்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
