கோவை: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் 51. சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் அந்த நகைக்கடையின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்து வியாபாரிகள் செல்போன் மூலம் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 50 பவுன் நகை 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, கடையின் பூட்டையும் ஷட்டரையும் கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருப்பது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலீசில் சிக்கி கொள்ளாமல் தப்பிக்க அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.