திருவாரூர்: ஆதியன் பழங்குடி இனத்தை சார்ந்த பூம்பூம் மாட்டுக் காரர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வாழ்பவர்கள்.
இவர்களில், ஆண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தை காட்டுவது. பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்று பிழைப்பு நடத்துவது ஆகும்.
தற்பொழுது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில். இவர்களுக்கு பிழைப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கு வழி தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது மாடுகளை வைத்து பராமரிக்க முடியாததால் பூம்பூம் மாட்டுக்காரர்கள், மாடுகள் இல்லாமல் வீடு வீடாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் உள்ளனர். குறிப்பாக இதில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு பசிக்கொடுமை இருந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (15.06.21) மேற்படி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அங்கு வசிக்கும் மக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியின்றி வாழ தேவையான அரிசி, மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தி உரையாற்றினார்கள்.
மேலும் ஊரடங்கு தொடரும்பட்சத்தில் அவர்களுக்கு இதேபோன்று அனைத்து உதவியையும் தொடர்ந்து செய்வதாகவும், மேலும் அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் சம்மந்தப்பட்ட துறையினர் மூலம்நிறைவேற்ற உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா